நல்ல செய்தி ஜோடி
Sr. Aloysia
Sr. Aloysia Served 30 years in the parish of Mettupatti, Dindugal for the people and to the people
My Story
தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் இணையம் என்ற ஊரில் சைமன் அலெக்சாண்டர் பிலோமினா என்ற தம்பதியருக்கு பிறந்த இரண்டு புதல்வியரில் இணைய மகளாக ரெமிஜியஸ், மார்ச் மாதம் இரண்டாம் தேதி 1944 ல் பிறந்தார். தெய்வபயமும் இறை நம்பிக்கையும் ஆழ்ந்த விசுவாசமும் கொண்ட கிறிஸ்துவ குடும்பத்தில் வளர்ந்து வந்த இவர், தம் இளைய வயதிலேயே தந்தையை இழந்தார் .தனது 15 வது வயதில் இறை அழைத்தலை உணர்ந்தாலும் குடும்பத்தினரின் அனுமதி கிடைக்கவில்லை. இரண்டு வருட காலம் புனித சகாய மாதாவின் நவ நாட்களில் பங்கெடுத்து உற்றார் உறவினரின் அனுமதி பெற்றார். பங்குத்தந்தை பாதர் மார்டின் அலங்காரம் அவர்களால் வழி நடத்தப்பட்டு ஹோலி கிராஸ் சபையில் பிப்ரவரி 11ஆம் தேதி 1963 இல் சேர்ந்தார் துறவற வாழ்க்கையை புரிதலுடன் ஏற்றுக்கொண்டு 2-2- 1967 இல் சிஸ்டர் அலோசிய என்ற பெயரில் ஹோலி கிராஸ் சபையில் உறுப்பினரானார் தம்மை படைத்த கடவுளையும் அவருடைய மக்களை என்றென்றும் அன்புடன் நேசித்து வாழ வேண்டும் என்ற உறுதியுடன் தம் இறை பயணத்தை தொடங்கினார். 1967- 68 இல் மும்பையில் ஹோம் சயின்ஸ் கல்வி அறிவைப் பெற்றுக் கொண்ட இவர் கொல்லம் கொட்டியம் செம்புலா சிக்மங்களூர் சேர்த்தலை பஜ்ரொன் கோத்தகிரி கொத்தமங்கலம் விருதுநகர் திண்டுக்கல் ஆகிய இடங்களில் தன் இறைப்பணியை செவ்வனே நிறைவேற்றினார். 1982ல் ஜம்மு- காஷ்மீரில் பணியாற்ற கிடைத்த அரிய வாய்ப்பில் இறை அழைப்பின் திருப்புமுனையை தம் வாழ்வில் உணர்ந்தார். குட் நியூஸ் கப்புள்ஸ் என்ற இயக்கத்தின் உருவாக்கத்திற்கு விதை இடப்பட்டது இங்கு இறை குரலை புரிந்து கொள்ள இயலாத நிலையில் ஆனார்.6-3-1999ல் திண்டுக்கல் மறைமாவட்டத்தில் மேட்டுப்பட்டி மண்ணில் தம் பணி வாழ்வை எளிய முறையில் தொடங்கினார் அவரின் பாதம் படியாத இல்லங்கள் இங்கு இல்லை என்று சொன்னால் யாராலும் மறுக்க இயலாது. சிஸ்டர் அலோஷியா இறை சமூகத்தின் மனமாற்றத்திற்கும் தனிமனிதன் குடும்பம் மேட்டுப்பட்டி திருச்சபையில் புனர் வாழ்வுக்கு புண்ணியமாய் மாறினார் மேட்டுப்பட்டி மக்களின் மனங்களில் மறையாத மறைக்க முடியாத தீபமாக விளங்கும் இவர் டிசம்பர் மாதம் 5ஆம் தேதி 2023 அன்று அதிகாலை தமது 79 வது வயதில் இன்னல்கள் இன்றி இறைவனடி சேர்ந்தார் . அப்பா எனக்காக ரெடியாகி வைத்திருக்கிற வீட்டுக்கு எனக்கு போகணும் என்று அதிக தயாரிப்புடன் அடிக்கடி சொல்லும் இவர் இன்று வானுலக வீட்டில் வானவருடன் மன மகிழ்ந்து வாழ்கிறார் என்பதில் எந்த அச்சமும் இல்லை.
திண்டுக்கல் மறைமாவட்டம் மறக்க முடியாத இறை தூதராய் விளங்குகிறார் என்பதில் சிறுவை சபை பெருமை கொள்கிறது மேட்டுப்பட்டி மக்களின் விருப்பத்திற்கு மறுக்க முடியாமல் திருச்சிலுவை சபை மக்களோடு இணைந்து இந்நிகழ்வில் இறை விருப்பத்துடன் பங்கு கொள்கிறது சிஸ்டர் அனுசியா உங்களை பிரிய மனமில்லாமல் வழியில்லாமல் பிரியா விடை சொல்கிறோம் எங்களுக்காக இறைவனிடம் மன்றாடம்
Contact
I'm always looking for new and exciting opportunities. Let's connect.
123-456-7890